182 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற ஆணை


182 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற ஆணை
x
தினத்தந்தி 6 May 2022 11:02 PM IST (Updated: 6 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 182 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற ஆணை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மணவெளி தொகுதியை சேர்ந்த விதவைகள், முதியவர்கள் என 182 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் நடந்தது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் வடிவேலு, ஆய்வாளர் ஆஷா, பா.ஜ.க. பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மனோகர், காத்தவராயன், தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே காலை 9 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் வர காலதாதமம் ஆனதால் 11.30 மணிக்கு தான் நிகழ்ச்சி தொடங்கியது. அதுவரை பயனாளிகள் காத்திருந்தனர்.
அப்போது விழாவுக்கு வந்த விதவை பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆசுவாசப்படுத்தினர்.

Next Story