பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை


பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 May 2022 11:38 PM IST (Updated: 6 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

பாப்ஸ்கோ மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கான வாடகையை வழங்க வேண்டும், பொங்கல் பஜார், இலவச அரிசி வினியோகம் செய்தது ஆகியவற்றுக்கான நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை நேற்று அவர்கள் திடீரென முற்றுகையிட்டனர். அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. பாப்ஸ்கோ ஊழியர் நலச்சங்க கவுரவ தலைவர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். செயல் தலைவர் அபிசேகம், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் அமுதவல்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுடன் இயக்குனர் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வாரத்துக்குள் நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story