தமிழ்ச்சங்க தலைவர் முத்துவுக்கு ரங்கசாமி வாழ்த்து
பவள விழா கொண்டாடிய புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்துவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
பவள விழா கொண்டாடிய புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்துவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
ரங்கசாமி வாழ்த்து
புதுவை தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து பவள விழா திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ராஜா நந்திவர்மன் கல்லூரியில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு வி.முத்து- கிருட்டிணவேணி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து விழா மலரை வெளியிட்டார். அதனை அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை பொதுச்செயலாளர் முகுந்தன், மத்திய அதிவிரைவு படை உயர் அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பவள விழா மலரை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட சபாநாயகர் செல்வம், வெற்றிஅழகன் எம்.எல்.ஏ., மணக்குள விநாயகர் கல்வி குழும நிர்வாக இயக்குனர் தனசேகரன், புதுவை கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தொண்டைமண்டலம் ஆதினம், வடலூர் ஊரன் அடிகளார் சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் ஆசி வழங்கினார்கள்.
தபால் தலை
அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் முகுந்தன், முத்துவின் உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், வா.மு.சேதுராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ஏ.கே.டி.ஆறுமுகம், தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், வி.ஐ.டி. துணைத்தலைவர் செல்வம், திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி கணேஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
பேராசிரியர் அப்துல் காதர் தலைமையில் 75 கவிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் புதுவை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், மாதவ சின்ராசு, போஸ், சீத்தாபதி, முன்னாள் நீதிபதி சேது முருகபூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் தமிழ்ச்சங்க தலைவர் முத்து ஏற்புரையாற்றினார். முடிவில் அவரது மகன் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story