விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு: தலைமை செயலக காலனி போலீசார் 2 பேர் கைது
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் தலைமை செயலக காலனி போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை தலைமை செயலக காலனி போலீசார் கடந்த மாதம் 18-ந் தேதி அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் விக்னேஷ் (வயது 25) என்பவர் பிடிபட்டார். போலீஸ் விசாரணையில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் மீது ‘சஸ்பெண்டு’ நடவடிக்கை எடுக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
விக்னேஷ் மரணம் தொடர்பாக கடந்த சில நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசார் முனாப், பவுன்ராஜ் ஆகிய இருவரைசி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
Related Tags :
Next Story