சிந்துவின் ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்


சிந்துவின் ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்
x
தினத்தந்தி 7 May 2022 12:36 AM IST (Updated: 7 May 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் கைப்பந்து ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘‘வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!’’ கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவை கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

மீண்டும் ‘வாலிபால்' (கைப்பந்து) ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story