தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல்; கேள்வி நேரம் இல்லை - சபாநாயகர் அப்பாவு
இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை, கவர்னர், அமைச்சரவை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக சட்டப்பேரவை கூடுகிறது.
இந்த நிலையில், கேள்வி நேரம் இல்லாமல் இன்றைய தினம் சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி, இன்றைய தினம் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சட்டப்பேரவை தொடங்கியதும் அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
Related Tags :
Next Story