அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி ; சட்டசபையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை வேளைகளில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சென்னை
முதல் -அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ; அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும்.
* ஊட்டசத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை : டெல்லியை போன்று தமிழகத்திலும் "தகைசால் பள்ளிகள்" உருவாக்கப்படும்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.மாநகராட்சி, நகராட்சிகளில் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்
* 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
* தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றித் தரப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களின் முக்கியமான 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story