அரசுப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி; அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசுப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று மனிதவள மேலாண்மைத்துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது;-
டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் குழுமம் ஆகியவை மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு இந்த செயலி மூலம் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள், ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல், போன்ற பணிகளையும் செயலி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்திற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story