எழும்பூரில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலையை கி.வீரமணி திறந்து வைத்தார்


எழும்பூரில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலையை கி.வீரமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 May 2022 6:46 PM IST (Updated: 7 May 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள வேனல்ஸ் சாலைக்கு ‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்த நிலையில் கி.வீரமணி பெயர் பலகையை திறந்து வைத்தார்.

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை‘ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த சாலைக்கு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை‘ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் அமைச்சர்களுக்கும், மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.


Next Story