கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
நிரவி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி போராட்டக்குழு சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது
காரைக்காலை அடுத்த நிரவி பகுதியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இநதநிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டக்குழு சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி புதுச்சேரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் இன்று நடந்தது. இதற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் நிசார் தலைமை தாங்கினார். இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.
Related Tags :
Next Story