தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்


தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 May 2022 6:49 AM IST (Updated: 8 May 2022 6:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று (08-ந் தேதி) 1 லட்சம் இடங்களில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை செலுத்தாதவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசி முகாமை தவறாமல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறித்தியுள்ளனர்.

Next Story