மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து -  வாலிபர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 May 2022 9:51 AM IST (Updated: 8 May 2022 9:51 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே சரக்கு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழப்பு.

வடமதுரை, 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமனம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 21), இவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த துளசி (  20), வா.உ. சி., நகரைச் சேர்ந்த குமார் (19) ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிளில் வேடச்சந்தூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு  சென்று கொண்டிருந்தனர். 


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மரவனூர் என்ற இடத்தில் செல்லும்போது மணப்பாறையில் இருந்து திருச்சி மீன்மார்க்கொட்டுக்குச் சென்ற மினிசரக்கு வேன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் படுகாயமடைந்த சக்திவேல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த குமார் மற்றும் துளசி ஆகிய இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story