சென்னை: ஆக்கிரமிப்பு அகற்றம் - ஒருவர் தீக்குளிப்பு
சென்னை, மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் தீக்குளித்தார்.
சென்னை,
சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் கண்ணையாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞர்கள் அங்கிருந்த அரசு வாகனங்கள், புல்டோசரின் மீது கற்களை எரிந்து அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவிந்தசாமி நகரில் குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story