சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 May 2022 2:12 PM IST (Updated: 8 May 2022 2:12 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால், தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் காலிப்ளவர் கிலோ ரூ. 40 ஆகவும், முட்டைகோஸ் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட் 35 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அவரை 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், வரி கத்தரி 25 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் 25 ரூபாய்க்கும் இஞ்சி 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Next Story