போலீசுக்கு பயந்து விஷம் குடித்த டிரைவர்
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போலீசுக்கு பயந்து விஷம் குடித்தவரை சிகிச்சைக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போலீசுக்கு பயந்து விஷம் குடித்தவரை சிகிச்சைக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
டிரைவர்
புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர், டிரைவர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மனைவி, குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தனியாக வசித்து வந்த வாலிபர், 17 வயதுள்ள ஒரு சிறுமியை காதலித்து அவரை கர்ப்பமாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகளுக்கு பாலியல் தொல்லை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது மனைவி குழந்தையுடன் சேர்ந்து வாழ வேண்டும், எங்களை சேர்த்து வையுங்கள் என உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.
அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் தனது 5 வயது குழந்தையை மட்டும் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியக்கோவில் புதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தந்தையும், மகளும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர்.
பின்னர், குழந்தையை, அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். இந்த நிலையில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனேஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தபோது, பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
தற்கொலை முயற்சி
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூர தந்தையை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாருக்கு பயந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுவை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அவரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story