2-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


2-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 8 May 2022 10:40 PM IST (Updated: 8 May 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் ஆந்திரா-ஒடிசா இடையே நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல் காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு இருக்கிறது.


Next Story