மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வேடிக்கை நிகழ்ச்சி


மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வேடிக்கை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 May 2022 11:27 PM IST (Updated: 8 May 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி தேங்காய்திட்டு ஆச்சார்யா பாலா சிக்‌ஷா மந்திர் பள்ளியில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி தேங்காய்திட்டு ஆச்சார்யா பாலா சிக்‌ஷா மந்திர் பள்ளியில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் தனித்திறமை
புதுச்சேரி ஆச்சார்யா உலக தரக்கல்வி குழுமம் சார்பில் தேங்காய்திட்டில் உள்ள ஆச்சார்யா பாலா சிக்‌ஷா மந்திர் பள்ளியில் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் பனாமி-22 வேடிக்கை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மாணவர்களுக்கு 30-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு புத்தங்களை புரட்டி பார்த்து புத்தகத்தின் பெயர், அதில் கூறப்பட்டுள்ள கதை, எழுதியவர் பெயர், மொத்த பக்கம் உள்ளிட்டவைகளை சொல்லி அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார்கள்.
குலுக்கல் முறையில் பரிசு
அதேபோல் பந்து விளையாடுதல், கீபோர்டு வாசித்தல், ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்தல் மற்றும் அதன் வரிசை எண்களை கூறினர். இதுதவிர மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், யோகா, சிலம்பம், தப்பாட்டம், சிவன் கோவில்களில் வாசிக்கப்படும் சிவபூதகண திருக்கயிலாய வாத்தியங்களை மாணவ-மாணவிகள் வாசித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், 6 பேருக்கு ஸ்மார்ட் வாட்சுகளும், 10 பேருக்கு டேப் ஆகியவற்றை ஆச்சார்யா கல்வி குழும தலைமை வழிகாட்டி டாக்டர் அரவிந்தன் வழங்கினார்.
பிரபல டி.வி. தொகுப்பாளர்கள் மா.கா.பா.ஆனந்த், அர்ச்சனா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். இதில் ஆச்சார்யா பள்ளி முதல்வர், ஆசிரியர்-ஆசிரியைகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story