மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த போலீசார்


மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த போலீசார்
x
தினத்தந்தி 8 May 2022 11:44 PM IST (Updated: 8 May 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே பறிமுதல் செய்ப்பட்ட மாட்டு வண்டிகளை போலீசாரே போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்தனர்.

வில்லியனூர் அருகே உள்ள கோடம்பாக்கம் பகுதியில் சங்கராபரணி ஆற்றங்கரையில் திருட்டு தனமாக மணல் அள்ளப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் 3 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி சென்றது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை போலீசாரே போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்தனர்.

Next Story