முல்லை பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஆய்வு
முல்லை பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னை,
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்திவருகிறது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், முல்லை பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கேரளா சார்பில் மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story