இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம் - கவிஞர் வைரமுத்து டுவீட்
இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி புதுவை கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இங்குள்ள அனைத்து பதிவுகளிலும் தற்போது இந்தி கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவிற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம். இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம். ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும். சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது” என்று தெரிவித்துள்ளார்.
கடைசியில் இந்தி
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2022
ஜிப்மர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது;
வருந்துகிறோம்
இந்தி படிப்போரை
வெறுக்கமாட்டோம்;
திணிப்போரை
ரசிக்கமாட்டோம்
ஒருமைப்பாடு
சிறுமைப்படாதிருக்க
நாட்டின் பன்மைக்கலாசாரம்
பாதுகாக்கப்படவேண்டும்
சிலர்
நுழைக்கப்பார்ப்பது
ஊசியில் நூலன்று;
ஒட்டகம்
நுழையாது
Related Tags :
Next Story