தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு
x
தினத்தந்தி 9 May 2022 4:51 AM GMT (Updated: 2022-05-09T10:21:39+05:30)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.

சென்னை,

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ. 32 குறைந்து, ரூ.38,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,873-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து, ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.66.700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story