மயிலாப்பூர் இரட்டைக் கொலை சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு,விசாரணை விரைவாக நடைபெற்றது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
மயிலாப்பூர் இரட்டை கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- கடந்த 7-ம் தேதி மயிலாப்பூர் இரட்டைக் கொலை தொடர்பாக புகார் பெறப்பட்டதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சென்னை காவல்துறையினர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய ஓட்டுனர் கிருஷ்ணா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறை கைது செய்துள்ளது என கூறினார்.
மேலும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா கொலை ஆதாயத்துக்காக நடந்த கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்
Related Tags :
Next Story