சென்னை: வேகமாக வந்த பைக்... ஆட்டோவில் மோதி பறக்கும் அதிர்ச்சி காட்சி


சென்னை: வேகமாக வந்த பைக்... ஆட்டோவில் மோதி பறக்கும் அதிர்ச்சி காட்சி
x
தினத்தந்தி 9 May 2022 1:02 PM GMT (Updated: 9 May 2022 1:02 PM GMT)

சென்னை அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த பைக் ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை,

சென்னை அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் முன்னே சென்ற ஆட்டோ மீது மோதி விபத்து நிகழும் பரபரப்பான காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

ஒரக்கடம் அருகே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி வந்த இளைஞர், முன்னே சென்ற ஆட்டோவை முந்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

அதில் இளைஞர் தூக்கி வீசப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Next Story