பிளஸ்-2 ஆங்கில தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட 3 மாணவர்கள் பிடிபட்டனர்..!
இன்று நடந்த பிளஸ் 2 ஆங்கில தேர்வில் 3 மாணவர்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்தார்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆங்கிலத் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வு சற்று எளிமையாக இருந்ததாகவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
காப்பி அடித்தல் போன்ற முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிப்பதற்காக அரசு தேர்வுகள் துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாணவரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாணவரும் என மொத்தம் 3 மாணவர்கள் பிடிப்பட்டனர் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராமன் வர்மா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story