ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை


ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை
x
தினத்தந்தி 9 May 2022 10:51 PM IST (Updated: 9 May 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இந்தி திணிப்பு இல்லை என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ிப்மரில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இந்தி திணிப்பு இல்லை என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கவர்னர் ஆய்வு
ஜிப்மரில் பதிவேடுகளை இந்தியில் எழுத இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் ஜிப்மரை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஜிப்மரில் இன்று ஆய்வு மேற்கொண்டார். சுற்றறிக்கை தொடர்பாக ஜிப்மர் இயக்குனரிடம் விவரங்களை கேட்டறிந்தார். 
பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தவறான புரிதல்
ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்து உலவி வருகிறது. உண்மை நிலை அவ்வாறு இல்லை. நிர்வாக ரீதியிலான சுற்றறிக்கை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் ஜிப்மர் ஊழியர்கள் சவால்களை ஏற்று பணி புரிந்தனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மக்களுக்கு சிறப்பான சேவை அளித்தனர். எந்த நேரத்திலும் இங்கு மொழி திணிப்பு என்பது இல்லை. உள்கட்டமைப்புக்கான நிர்வாக ரீதியிலான சிலவற்றில் முடிந்தவரை ஆங்கிலம் அல்லது இந்தியை பயன்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முதலில் தமிழ்
நிர்வாகம் சார்பில் 4 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் பொதுமக்கள் தொடர்பு, பரிமாற்றம், சீட்டுகள், துறைகள் எல்லாவற்றிலும் தமிழ் இருக்கவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையும் அதே தேதியில் தான் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சிலர் இந்தி மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர்.
3-வது சுற்றறிக்கையில் தமிழில் பெயர்ப்பலகைகள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் முதலில் தமிழ்தான் இருக்கவேண்டும் என்றும் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எங்கும் இந்தி திணிப்பு இல்லை. தமிழ்மொழி பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் வேண்டாம். சிலரால் இந்தி திணிப்பு போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புடைய அனைத்தும் தமிழில்தான் இருக்கும். எனவே இதை அரசியலாக்க வேண்டாம், போராட்டம் என்பது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story