11ம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது


11ம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 May 2022 11:05 PM IST (Updated: 9 May 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நாளை தொடங்கும் பிளஸ்-1 தேர்வை 15 ஆயிரத்து 145 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

புதுச்சேரியில் நாளை தொடங்கும் பிளஸ்-1 தேர்வை 15 ஆயிரத்து 145 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
பிளஸ்-1 தேர்வு
கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரசு பொதுத்தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன.
15 ஆயிரம் பேர்
 இந்தநிலையில் பிளஸ்-1 தேர்வுகளும்  நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன.
புதுவை, காரைக்காலில் இந்த தேர்வுகளை 7 ஆயிரத்து 333 மாணவர்கள், 7 ஆயிரத்து 812 மாணவிகள் என 15 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 7 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story