மற்ற கட்சியினரை விமர்சிக்க நாராயணசாமிக்கு உரிமையில்லை


மற்ற கட்சியினரை விமர்சிக்க நாராயணசாமிக்கு உரிமையில்லை
x
தினத்தந்தி 9 May 2022 11:52 PM IST (Updated: 9 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

மற்ற கட்சியினரை விமர்சிக்க நாராயணசாமிக்கு உரிமையில்லை என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சியினரை விமர்சிக்க நாராயணசாமிக்கு உரிமையில்லை என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைப்படி புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுச்சேரி மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் உப்பளம் அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி    கிழக்கு மாநில அவைத்தலைவர்   அன்பா னந்தம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநில செயலாளர் (கிழக்கு) அன்பழகன் பேசியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எவ்வாறு செயல்படக் கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழக தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு உள்ளது.
விமர்சிக்க உரிமையில்லை
புதுச்சேரியில் ஆட்சி அமைந்து ஒரு வருடத்தில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 90 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மழைக்கால    நிவாரணம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், மீனவர் களுக்கு   ஓய்வு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணியின் நல்லாட்சியை புரிந்து கொள்ளாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான அறிக்கை வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியை நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றவருக்கு மற்றவர்கள், மற்ற கட்சியினரை விமர்சிக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. ஆட்சி
கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க.வை சிறப்பாக நடத்தி எதிர்காலத்தில் ஆட்சி அமைய பாடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர்கள் உமா என்ற கோவிந்தம்மாள், வையாபுரி மணிகண்டன், பொருளாளர்  ரவிபாண்டு ரங்கன், மாநில ஜெயலலிதா பேரவை    செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு.மான பாஸ்கர், துணைத் தலைவர் ராஜாராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story