கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது சாலை தடுப்பு கம்பியில் கார் மோதி 2 பேர் பலி


கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது சாலை தடுப்பு கம்பியில் கார் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2022 2:16 AM IST (Updated: 10 May 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது சாலையின் மைய தடுப்பு கம்பியில் கார் மோதியதில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.

திருச்சி,

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 34). இவரும் கொரட்டூரைச் சேர்ந்த காமராஜ் (29), கார்த்திக் (29), வானகரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (29), கவியரசு (31), சுரேஷ் (40), ஆவடியை சேர்ந்த செல்வகுமார் (32) ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

2 பேர் பலி

காரை செல்வகுமார் ஓட்டினார். கார் நேற்று முன்தினம் நள்ளிரவு திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், ஆசாத்ரோடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி இரும்புக் கம்பியில் சொருகிக் கொண்டது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன், ஏழுமலை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ், காமராஜ் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

Next Story