ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்..!
திருவள்ளூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ஆர்.கே பேட்டை பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் ஆட்டோ டிரைவர் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் கொத்தபள்ளி மிட்டா பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(32) என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை போலீசார் திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஆந்திரா மாநிலம் வெங்கட்டராஜ குப்பம் பகுதியை சேர்ந்த உத்தரகுமார் தப்பி ஓடிவிட்டார் என்றும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story