“தமிழகத்தில் எந்தவித மின்தடையும் இல்லை” - அமைச்சர் செந்தில் பாலாஜி


“தமிழகத்தில் எந்தவித மின்தடையும் இல்லை” - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 10 May 2022 7:26 AM GMT (Updated: 10 May 2022 7:26 AM GMT)

தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் எம்எல்ஏ மணிக்கண்ணன் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசியதாவது:-

பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களும், மே மாதத்தில் 6 நாட்களும் உச்சபட்ச மின் தேவை 16,000 மெகாவாட்டாக உயர்ந்த போதிலும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு, தடையில்லா சான்று வழங்கப்பட்டால் தான், மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின் இணைப்பு இல்லாத வீடுகள் பற்றிய விவரங்களைத் தந்தால், வருவாய்த்துறையுடன் பேசி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story