தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு


தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 10 May 2022 3:40 PM IST (Updated: 10 May 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் 22 நாட்கள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். குறிப்பாக, சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா உட்பட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று வரை 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது ; மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Next Story