6,000 லிட்டர் டீசலோடு கவிழ்ந்த லாரி - பாட்டில்களில் டீசலை பிடித்துச் சென்ற மக்கள்

6,000 லிட்டர் டீசலோடு கவிழ்ந்த லாரி - பாட்டில்களில் டீசலை பிடித்துச் சென்ற மக்கள்
x
தினத்தந்தி 10 May 2022 7:21 PM IST (Updated: 10 May 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே விபத்துக்குள்ளான டீசல் லாரியிலிருந்து, பொதுமக்கள் டீசலை பிடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை,

சீர்காழி அருகே விபத்துக்குள்ளான டீசல் லாரியிலிருந்து, பொதுமக்கள் டீசலை பிடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிக்கு, 6 ஆயிரம் லிட்டர் டீசலை ஏற்றி வந்த லாரி, பூங்குடி கிராமத்தில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுனர் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்நிலையில் கவிழ்ந்த லாரியை மீட்கும்போது அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆபத்தை உணராமல் டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை பாட்டில், கேன்கள் மூலம் பிடித்து சென்றனர்.

Next Story