தமிழகத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2022 7:55 PM IST (Updated: 10 May 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை,

மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலின் படி,

தமிழகத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20-ல் இருந்து 23 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர். 

இன்று ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 454இல் இருந்து 441 ஆக குறைந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story