அனுமதியின்றி பேனர் தயாரிப்பவர்களுக்கு எச்சரிக்கை


அனுமதியின்றி பேனர் தயாரிப்பவர்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 May 2022 10:25 PM IST (Updated: 10 May 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் தயாரிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேனர்களை அகற்றினர். தொடர்ந்து திருக்கனூரில் பேனர்கள் தயாரிக்கும் கடைகளில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் பேனர் தயாரிக்கும் கடை வைத்திருப்பவர்கள் உடனடியாக மூட வேண்டும். உரிய அனுமதி பெற்று கடைகளை நடத்த வேண்டும். அவ்வாறு கடை நடத்துபவர்கள் கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பேனர் தயாரித்து கொடுக்க வேண்டும். பேனர் தயாரித்து கொடுப்பவரின் செல்போன் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. ஆய்வின் போது கொம்யூன் பஞ்சாயத்து உதவி மேலாளர் அன்பழகன், செயற்பொறியாளர் மல்லிகார்ஜூனன்,  இளநிலை பொறியாளர்  மனோகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story