மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
புதுவையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவர் 10 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டார்.
புதுவையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவர் 10 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
அதன்படி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் கைவரிசை
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி நாராயண நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில், திரு புவனை, வில்லியனூர், கிருமாம்பாக்கம், பெரியகடை உள்பட பல இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. அவரது தகவலின் பேரில் தனது வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த 9 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன்பின் வெங்கடேசனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் காலாப்பட்டு சிறையில் வெங்கடேசனை போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story