கருணைத்தொகை பெற 90 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்


கருணைத்தொகை பெற 90 நாட்களுக்கு  விண்ணப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2022 11:01 PM IST (Updated: 10 May 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் பெற 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வல்லவன் கூறியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் பெற 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வல்லவன் கூறியுள்ளார்.
புதுவை கலெக்டர் வல்லவன்  விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலவரையறை
கொரோனா தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. தவறான முறையில் கருணைத்தொகை பெறுவதை தடுப்பதற்கும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டியுள்ளது.
தற்போது கடந்த 2-ந்தேதி வரை மொத்தம் 2 ஆயிரத்து 189 நபர்களுக்கு புதுவை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கருணைத்தொகை பெற தகுதியுடையவர்கள் இதுநாள் வரை விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த காலவரையறைக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
90 நாட்களுக்குள்...
அதன்படி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு முன்பு நிகழ்ந்த இறப்பு தொடர்பாக 24-3-2022   முதல்  60    நாட் களுக்குள் அதாவது மே மாதம் 22-ந் தேதிக்குள் விண்ணப்பித்து கருணைத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் மார்ச் 20-ந்தேதி முதல் ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது  30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தவிர்க்க முடியாத காரணத்தினால் மேல் வரையறை செய்யப்பட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க இயலாதவர்கள் கொரோனா குறைதீர்ப்பு குழுவின் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தவறான முறையில்...
பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டின் இந்த ஆணையை கருத்தில்கொண்டு கொரோனா இறப்பு தொடர்பாக பயன்பெற விரும்புவோர் மேற்கூறிய காலவரையறையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தவறான முறையில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து நிவாரணம் பெற முற்படுபவர்கள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் பிரிவு 52-ன் கீழ் தண்டிக்கப் படுவார்கள்.
இவ்வாறு  அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story