உப்பனாறு கரையை மேம்படுத்தும் பணி
நல்லவாடு கிராம பஞ்சாயத்தில் உப்பனாறு கரையை மேம்படுத்த பணியை சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மணவெளி தொகுதிக்குட்பட்ட நல்லவாடு கிராம பஞ்சாயத்தில் உப்பனாறு மேற்கு மற்றும் தெற்கு பகுதி கரையை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 28 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படுகிறது. இதனை சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் நல்லவாடு பகுதியை சேர்ந்த 30 பேருக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய புதிய அடையாள அட்டையை சபாநாயகர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் குப்புராம், திட்ட ஊழியர் ஆறுமுகம், பா.ஜ.க. விவசாய அணி மாநில நிர்வாகிகள் ராமு, சக்திபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுனாமி குடியிருப்பு பகுதியில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story