இளையான்குடி அருகே குடிபோதையில் ரகளை செய்யும் வாலிபர்களால் பரபரப்பு...!
இளையான்குடி அருகே குடிபோதையில் ரகளை செய்த வாலிவர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள உலகமணியேந்தல் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 52). இவரது மகள் வேகா உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்து உள்ள வேகாவிடம் குமாரக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன்(25), அவரது நண்பர் மகேஷ் ஆகிய இருவரும் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story