குரூப் 2 தேர்வு - முகக்கவசம் கட்டாயம்..! ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை..!
குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் இன்று வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வருவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசுப் பணியார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோன்று தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story