கோவில்பட்டி அருகே முள் படுக்கையில் படுத்து அருள் ஆசி கூறிய சாமியாடி...!
கோவில்பட்டி அருகே முள் படுக்கையில் படுத்து கொண்டு சாமியாடி அருள் ஆசி கூறி உள்ளார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தில் பத்திரகாளியம்மன், செல்வ விநாயகர் மாரியம்மன், உச்சி மகா காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் அம்பாள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. உச்சி மகா காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை 9.30 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி, முடி காணிக்கை, காது குத்துதல், நேர்த்திக் கடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் 9 அடி கருவேலம் முள் படுக்கையில் ஏறி நின்று சாமியாடி ஜெயபால் அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து அருள் வாக்கு கேட்டனர்.
மதியம் 3 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜை, உறியடித்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story