மாநில செய்திகள்

ரூ.36½ லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி + "||" + Construction of tharsalai at a cost of Rs 360 lakhs

ரூ.36½ லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி

ரூ.36½ லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி
மணவெளி பூரணாங்குப்பத்தில் ரூ.36½ லட்சத்துக்கு தார்சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
மணவெளி பூரணாங்குப்பம் ரோஜா நகர் சாமியார் நகர், கோவிந்தம்மாள் நகர் மற்றும் கந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 67 ஆயிரம் செலவில் தார்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் அகிலன், சரஸ்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.