தமிழகத்தில் நேற்றை விட சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! 32 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை


தமிழகத்தில் நேற்றை விட சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! 32 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 11 May 2022 3:26 PM GMT (Updated: 2022-05-11T20:56:08+05:30)

தமிழகத்தில் இன்று 12,231 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தமிழகத்தில் இன்று 12,231 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 439 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,16,006 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் சென்னையில் இன்று அதிகபட்சமாக சென்னை 19 பேர், செங்கல்பட்டு 8 பேர், கோவை 3, திருவள்ளூர் 3 பேர், சேலம், தூத்துக்குடி தலா 1 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலமான டெல்லி, உத்தரகாண்டில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 32 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story