பொதுமக்கள் நூதன போராட்டம்
தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கக்கோரி அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கக்கோரி அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பு வீடு
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம், மணலிப் பட்டு கிராமங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிட மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன
கட்டி முடிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் சிலர் அந்த வீடுகளை ஆக்கிரமித்துள்ளனர். வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்ககோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு பல முறைக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அம்பேத்கர் சிலையிடம் மனு
இந்தநிலையில் இன்று மண்ணாடிப்பட்டு பேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொகுப்பு வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தாரை தப்பட்டை முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அங்குள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்தனர். இனியாவது அரசு தங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story