பாட்டாளி தொழிலாளர்கள் சங்கத்தினர் வாயிற்கூட்டம்
புதுச்சேரி பி.ஆர்.டி.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பி.ஆர்.டி.சி. தலைமை அலுவலகம் முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடந்தது.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பி.ஆர்.டி.சி. தலைமை அலுவலகம் முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடந்தது. வாயிற்கூட்டத்திற்கு தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் நந்தகுமார், செயல் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுரவ தலைவர் ஜெயபாலன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சிவப்பிரகாசம், துணை செயலாளர்கள் துரைக்கண்ணு, மாரிமுத்து, திருமலை, தணிகாசலம் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், குறிப்பிட்ட தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், பி.ஆர்.டி.சி.யில் நிரந்தர மேலாண் இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பட உள்பட 12 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். முடிவில் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story