5 பேருக்கு தொடர் சிகிச்சை


5 பேருக்கு தொடர் சிகிச்சை
x
தினத்தந்தி 11 May 2022 11:41 PM IST (Updated: 11 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா பாதித்த 5 பேரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில்  இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி   நேரத்தில் 418 பேருக்கு கொரோனா பரிசோதனை   மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது ஏற்கனவே    பாதிக்கப்பட்ட 5 பேர் மட்டும்    வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்       சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 70 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 359 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 93 பேரும் செலுத்திக்கொண்டனர்.    இதுவரை   16 லட்சத்து 94 ஆயிரத்து  325  டோஸ் தடுப் பூசிகள் செலுத்தப்பட் டுள்ளது   என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story