வேளாண் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...!


வேளாண் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...!
x
தினத்தந்தி 17 May 2022 4:30 PM IST (Updated: 17 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே வேளாண் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

திருமயம், 

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் இருந்து பயிற்சி பெறும் 30 வேளாண்மை அலுவலர்கள் அலுவலக பேருந்தில் திருமயம் வழியாக சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு வேளாண்மை பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர். 

அப்போது திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்து முன்னே சென்ற காரை கடக்க  முயற்சி செய்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது .இதில் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமயம் வேளாண்மை அலுவலர்கள்  மற்றும் போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

Next Story