“மக்களே உஷார்...“ எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு
பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்ற மோசடி குறித்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்திவுள்ளார்.
சென்னை,
பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்ற மோசடி அதிகளவில் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்திவுள்ளார்.
சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், காவலர்களுக்கு பல்பொருள் அங்காடியின் விரிவாக்கப்பட்ட புதிய சுய சேவை பிரிவை, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பின் காவலர்கள் மத்தியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்ற மோசடிகள் குறித்து உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்டுக் கொடுக்க முடியும் என்று கூறினார்.
Related Tags :
Next Story