துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 May 2022 10:00 PM IST (Updated: 17 May 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

புதுச்சேரி மக்கள் நீதி மய்யத்தின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் சரவணப்பெருமாள் பிறந்த நாளை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று லாஸ்பேட்டையில் நடந்தது. விழாவிற்கு சரவண பெருமாள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள், உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் சக்திவேல் பட்டுரோஸ், தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் அரிகிருஷ்ணன், ருத்ரகுமாரன், தொகுதி செயலாளர்கள் பாலச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், பழனிவேலன், அய்யனார், சுப்ரமணி, சங்கர், லாஸ்பேட்டை குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மாணவர் அணி துணை செயலாளர் மகின்பர்வத் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணைந்தனர்.


Next Story