நகராட்சி ஊழியரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகராட்சி ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மூலக்குளம் கருவடிகுப்பம் சாமி பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 39) உழவர்கரை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் விழுப்புரம் மெயின் ரோடில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகுவைத்து ரூ.2 லட்சம் 19 ஆயிரத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அப்பகுதியில் உள்ள பூக்கடையில் பூ வாங்க சென்றார்.
அப்போது மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனம் அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேர் திடீரென வந்து இருசக்கர வாகனம் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை நைசாக எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
பூக்கடையில் இருந்து சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டியில் பணம் இல்லாததை கண்டு பழனியாண்டி அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story