ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு தடை


ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு தடை
x
தினத்தந்தி 18 May 2022 8:14 AM IST (Updated: 18 May 2022 8:14 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது .

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததுள்ளது .

இதனால்  ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது .
1 More update

Next Story